பிரான்சு பரிசில் வெளியே சென்று உடற்பயிற்சியில் ஈடுபட நாளை ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் புதிய சட்டம் நடைமுறையில் இருக்கும். இதற்கென குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளிருப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, உடற்பயிற்சியில் ஈடுபட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை பலர் தவறுதலாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பரிசில் காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி வரை வெளியில் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியில் ஈடுபட வெளியே செல்பவர்கள் காலை 10 மணிக்குள்ளாக வீட்டுக்குத் திரும்பவேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களும் தண்டப்பணம் செலுத்த நேரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மாலை 7 மணிக்கு பின்னர் தான் வெளியே உடற்பயிற்சிக்காக செல்ல முடியும்.