பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!

0
408

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நிலைமை மோசமாகிவிட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போரிஸ் ஜான்சனுக்கு 55 வயது, கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதால் தனிமையில் இருந்த அவர் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமையில் இருந்து பணிகளை கவனித்து வந்தார்.

கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டதால் அவர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நோயின் தொற்று அதிகரித்து காணப்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு பிரித்தானிய நேரப்படி இரவு 7 மணிக்கு சென் தோமஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here