கொழும்பில் கைவிடப்பட்ட மலையக இளைஞர்கள் தெருவில் உறக்கம்!

0
313

கொழும்பு மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாலும், வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாலும் சுமார் 40 மலையக இளைஞர்கள் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ளனர்.

அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்திசெய்துகொள்ளமுடியாமல் தெருவோரங்களில் தங்கி – வலிகளை சுமந்தபடி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களை பொறுப்பேற்பதற்கு பொலிஸார் மறுப்புத் தெரிவித்துவிட்டனர் என்றும், பொது மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரை இருந்தால் மட்டுமே பெறுப்பேற்க முடியும் என இராணுவம் அறிவித்தது என்றும் இளைஞர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு மாநகரசபையும் இது விடயத்தில் எவ்வித பதிலையும் இன்னும் வழங்கவில்லை.

அதேபோல் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் சூழ்நிலையும் காணப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் தங்குவதற்கு இடமொன்று தேவைப்படுகின்றது.

எனவே, இந்து ஆலயத்திலோ, விகாரையிலோ, பள்ளிவாசலிலோ, தேவாலயத்திலோ அதற்கான அனுமதி வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்குமென இளைஞர்கள் கருதுகின்றனர்.

அவ்வாறு இல்லாவிட்டால் தம்மை சொந்த ஊரிலாவது சுயதனிமைக்கு உட்படுத்தி விடுவிக்குமாறும் அவர்கள் மிகுந்த துயரத்தோடு அதிகாரிகளிடம் கேட்டுநிற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here