நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 4 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை கமநல அபிவிருத்தித் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகிறது.
அதன்படி யாழ்மாவட்டத்தில் முதற்கட்டமாக 7500 வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்ய யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இவ் வேலைத்திட்டத்தின் கீழ்
0.25g கத்தரி,
0.25g மிளகாய்,
1.67g வெண்டி,
3g பயிற்றை (ஒவ்வொன்றிலும் 25-30 விதைகள் ) மற்றும்
3g அவரை (8-10 விதைகள் )அடங்கிய பொதி ரூபா.20 வீதம் வழங்கப்படும்.
எனவே அர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை தங்களது பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கமநல சேவைகள் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்து விதைப்பைக்கற்றுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இவ்விதைகளுக்கு மேலதிகமாக வேறு விதைகள் மற்றும் நாற்றுக்கள் தேவைப்படின் இயலுமானவரை அவற்றினை வழங்க கமநல சேவைகள் நிலையங்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
தொலைபேசி இலக்கங்கள்.
- சாவகச்சேரி – 0779231738
- கைதடி – 0778205566
- நல்லூர் – 0773446026
- வேலணை – 0776628336
- புங்குடுதீவு – 0776578125
- தொல்புரம் – 0777647477
- கீரிமலை – 0775841254
- உடுவில் – 0774135082
- புத்தூர் – 0703503909
- உரும்பிராய் – 0779489650
- புலோலி – 0774004554
- அம்பன் – 0778075510
- காரைநகர் – 0779055960
- சண்டிலிப்பாய் – 0773688410
- கரவெட்டி – 0779078020
- மாவட்ட அலுவலகம் – 0703503900