கொரோனா தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகள் இதுவரை செலவிட்ட தொகை அனைத்தும் வீண் என கூறியுள்ள பில் கேடஸ், 7 தடுப்பூசிகள் இறுதி வடிவம் பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா என உலகின் பெரும்பாலான நாடுகளை சீரழித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகின் பல விஞ்ஞானிகள் குழு தனித்தும் சமூகமாகவும் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பில் தற்போதைய நிலை குறித்து விளக்கியுள்ளார் உலக செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பில் அனைத்து முயற்சிகளும் வேகமடைந்து வருவதாகவும், அதில் மிகவும் பலனளிக்கக்கூடிய 7 மருந்துகளை தெரிவு செய்து அதற்காக பல பில்லியன் டொலர்கள் செலவிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 7 மருந்துகளும் தயாரிப்பதற்கான முழு முயற்சிகளும் தற்போது வேகமெடுத்துள்ளதாகவும், அதில் ஒன்று அல்லது இரண்டு கண்டிப்பாக உலக மக்களுக்கு பலனளிக்கும் என பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் பல முன்னெடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்காததன் காரணம் குறித்து பேசிய பில் கேட்ஸ்,
இதுபோன்ற விவகாரங்களுக்கு அரசாங்கத்திற்கு பணம் திரட்ட முடியும், ஆனால் அதை எவ்வாறு கொண்டு செல்வது, இயக்குவது போன்றவற்றில் அரசாங்கங்கள் தடுமாறும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.