அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்றுமுன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இரண்டாவது சோதனையிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.
பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு பின் நாட்களில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ட்ரம் புக்கு கொரோனா பரிசோதனை, கடந்த சில வாரங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ட்ரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இரண்டாவது சோதனையிலும் ட்ரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று வெள்ளை மாளிகையின் வைத்தியர் கான்லி தெரிவித்தார்.
15நிமிடங்களில் சோதனை முடிவுகள் வெளியாகின. இதில் ட்ரம்ப் முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.