கொரோனாவுக்கு நுண்ணுயிர்க்கொல்லி மருந்து இல்லை. நோயின் தீவிரத்தன்மையையும் சளி அடைப்பதையும் கட்டுப்படுத்தும் சிகிச்சை தான் வழங்கப்படுகின்றது.
இதை ஏன் பகிர்கிறேன் என்றால் மக்கள் மத்தியில் ஒரு மூட நம்பிக்கையுண்டு கொரோனா நோய்க்கு குணப்படுத்த மருந்து உண்டு என.
இவ்வாறான சிந்தனை தனிப்படுத்தலைக்குறைத்து உயிரிழப்பையும் அதிகரிக்கச்செய்யும்.
நாளாந்தம் ஆய்வுத்தகவல்களை அவதானித்துத்தான் பதிவிடுகின்றோம். இது மக்கள் உயிர் வாழ்வதற்கான போராட்டம்.
சமூக இடைவெளியையும் வெளியே செல்லும் போது முகக்கவசத்தையும் அணியுங்கள். இவ்வைரசு நாட்டுக்கு நாடு வேறுபட்ட வீரியத்தைக்காட்டுவதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன.
கொரோனாவுக்கு ஆரம்பஅறிகுறிதெரிந்தவுடன் வைத்திய ஆலோசனை எடுப்பதுவும் அவரவர் நோயெதிர்ப்பாற்றலும் தான் தப்பிப்பிளைக்கவைக்குமே தவிர வேறெதுவும் இல்லை.
மருந்து /நுண்ணுயிர்க்கொல்லி இருந்தால் இவ்வளவு இறப்புக்கள் உலகில் வளர்ந்த நாடுகளில் நிகழாது இது தான் உண்மை.
ஐரோப்பிய நாடுகளில் ஆரம்ப அறிகுறிகளுடன் சென்ற பலரையே காப்பாற்றமுடியாது போய்விட்டது என பல செய்திகள் வாயிலாக அறிகின்றோம்
தவிர மருத்துவத்துறையினரையே, வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், துணைமருத்துவர்கள், பல விஞ்ஞானிகள், இவர்களைக்கூடக் காப்பாற்ற முடியாமைக்கான காரணம் என்ன?
இதற்கு விடை மருந்து இல்லை!
செல்வராசா சுரேஸ்குமார்.