தமிழகத்தினையடுத்து கொழும்பிலும் வேப்பிலைக்கு பெரும் கிராக்கி அதிகரித்துள்ளது. ஒரு வேம்பு ஆயிரம் வைத்தியர்களுக்கு சமன் என்று முன்னோர்கள் சொன்ன வாக்கு இப்போதுதான் கண்முன்னே உணர்த்துகிறது. கொழும்பில் ஒரு பிடி வேப்பம் இலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றை உண்டால் அல்லது பானமாக அருந்திகொண்டால் கொரோனா வராது என்று கூறியே விற்பனை செய்யப்படுகிறது.
கிராண்ட்பாஸ் பகுதிகளில் தான் இந்த விற்பனை இடம்பெறுகிறது.நேற்று முன்தினம் குறித்த வேப்பமிலை கட்டுகள் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு பெரும்பான்மையினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து நேற்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆரம்ப காலந்தொட்டே தமிழர் தாயகத்தில் வீட்டு வாயில்களில் வேப்பிலைகளை கட்டுவது வழமையாக உள்ளமை தெரிந்ததே.
கொரோனாவின் எதிரொலியாகத் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் வர்த்தக நிறவனங்கள் என அனைத்து இடங்களிலும் வேப்பம் இலையினை கட்டித் தொங்கவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.