மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கிராமத்திலுள்ள சமூக சேவை உத்தியோகத்தர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணியளவில் அவரது வீட்டில் வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செவ்வாய்க்கிழமை காலை தமது குடும்பத்தாருடன் மண்டூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து உரையாடிக் கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த நபரின் தலையின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூகசேவை உத்தியோகஸ்தராக கடமை புரிந்துவரும் 43 வயதுடைய குடும்பஸ்தரான சத்தியானந்தன் மதிதயன் என்பவரே மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்ப ட்டுள்ளதாகவும் குறித்த நபரின் தலையின் பின்புறத்தில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் முன்னரே இவர் உயிரிழந்துள் ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் தெரிவித்தார்.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளிப் பொலிசார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.