மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் இன்று மாலை 04.30 மணியளவில் உழவு இயந்திரத்தை அதிவேகமாக செலுத்தியதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரமொன்றில் மோதியதால் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ்.சுரேஸ்காந் (22வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொள்கின்றனர்.
உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தாருக்கு சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தொலைபேசி மூலம் பலியான விடயத்தைக் கூறியபோதும் இன்று முட்டாள்கள் தினம் என்பதைக் காரணம் காட்டி அதை நம்ப அவர்கள் மறுத்துத் தொலைபேசியைத் துண்டித்துவிட்டனர்.