எனது இணைபிரியா தோழி வியோலேட் இரண்டாம் உலகப்போரின் இடையில் பிறந்து வியோலேட் என்று பெற்றோர் பெயர் வைக்க பின்பு நவீனமாகப் பெயரை போலா என்று வைத்தார். ஆனால், எப்போதும் அந்த முதல் பெயரை வைத்து ஒவ்வொரு நாளும் சிரிப்பார். ஏனென்றால், அவர் பின்னர் சொந்தமாக இருந்தது வந்த வீட்டு முகவரி 24, rue violet அதாவது அவர் பெற்றோர் வைத்த அவர் பெயரில் முகவரி அமைந்தது.
அதுதான் வாழ்க்கையில் நமக்கு விதிக்கப்பட்ட எதையும் மாற்றி அமைக்க முடியாது எல்லாம் விதிக்கப்பட்டதாகும் என்று அடிக்கடி கூறுவார்.
இவர் போராட்ட ஈடுபாடு, அவர் தந்தை 3 பதக்கங்கள் பெற்ற பிரான்சு இராணுவ வீரர். இரண்டாவது உலகப்போர் கடந்து பல புரட்சி கண்டார் என்பதால், 2009இல் முள்ளிவாய்க்கால் உக்கிரமான நேரத்தில் பிரான்ஸ் தமிழர்களின் போராட்டம் கண்டார் . அதில் இருந்து ஒரு வீதிப் போராட்டமும் விடாது பொறுப்பாளர்கள் முன்பே சொன்ன இடத்தில் நிற்பார். கடைசியில் 2013 பகுதியில் பெண்கள் சார்பில் அவர் மட்டும் தான் நின்றார். அதாவது பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பு புதன் தோறும் நடந்த போராட்டங்களில் என்பதை யாரும் மறக்க முடியாது.
தனிமையில் வாழ்ந்து வந்த இவர் தமிழர்களில் மட்டுமே தன்னை கடைசி வரைக்கும் அடையாளம் கண்டார். அப்படி அமைய இவர் 2014-2015 என்னிடம் மட்டும் ஒவ்வொரு நாளும் எனக்கு முதலில் வந்து வேலை இடத்தில் சந்தித்து வந்த நிலையில், கடைசியில் அவர் வராத நிலையில் வீடு சென்று பார்த்த போதுதான் அந்த நாள் 31/3/2015 அவர் எற்கெனவே பல நாட்களாக இறந்துவிட்டார். என்றாலும், அவருக்கு கடைசி திகதி அன்று குறித்தார்கள், எமக்கு வேதனையையும் சேர்த்து.
அன்று உணர்ந்து சொல்வது இந்த உலகில் நாம்மை ஏதாவது எதிர்பார்புடன் தான் யாரும் உறவாடுவர்.
அவர் லட்சாதிபதி, ஆனால் அவர் எதையும் தனக்கு செலவிடாமல் எளிமையாக இருந்தும், தன் பாதுகாப்பில் அக்கறை கொள்ளாததால் தனிமையில் பிரிந்தார்.
எப்போதும் தனி நபரோ, தனி அமைப்போ யாருக்கும் இறுதியில் கைகொடுக்காது.
அவர் அவர் நகரசபை மட்டுமே கைகொடுக்கும் என்ற எதார்த்த நிலைக்கு கொண்டு வர முயன்றேன். ஆனால், முடியாது போனது.
எப்போதும் இப்படி யாராக இருந்தாலும் அவர்களுக்கு உறுதியான உதவிகளை செய்யுங்கள். உங்கள் செயல்பாடுகளை உறுதிப்படுத்தாமல், எதை செய்தாலும் அது யாருக்கும் உதவாது போகும்.
நன்றி!
கமலா நாகராஜா