பிரான்சு தேசத்தில் தமிழீழ மக்களுக்காக நீண்ட காலமாக களங்கள் தோறும் களமாடிக் குரல் கொடுத்துப் போராடிய வெள்ளை தேவதை “தமிழீழ விடுதலை இனப் பற்றாளர்’ #அன்னை_போலா (Mme.paula lugli violette) அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
பிரான்சில் 31.03.2015அன்று இயற்கையெய்திய பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை மக்கள் பிரதிநிதி; அம்மணி போலா லூயி வியோலெத் அவர்களுக்கு ‘தமிழீழ விடுதலை இனப் பற்றாளர்” என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு மதிப்பளிப்பு வழங்கியது.
கடந்த 22.04.2015 புதன்கிழமை பிற்பகல் பிரான்சில் இடம்பெற்ற அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வில் வைத்தே இந்த மதிப்பளிப்பு வழங்கப்பட்டு, புகழுடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
இந்த மதிப்பளிப்புத் தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:-