
இலங்கையில் கொரோனா தொற்றால் இரண்டாவது நபர் மரணமடைந்துள்ளார்.
நவலோகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த நபர் நீர்கொழும்பு – பேருதொட்ட பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.