சம்மாந்துறை கோரக்கர்கோயில் தமிழ் மகாவித்தியாலயத்தில் க.பொ.த. (சா/த) பயின்ற மாணவியான கனகசூரியம் நிலக்சிகா (வயது 15) நேற்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோரக்கர்கோயில் உதயபுரம் தமிழக்குறிச்சி 4ஆம் பிரிவிலுள்ள அவரது வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்ற சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.கருணாகரன் தூக்கில் தொங்கிய மாணவியைப் பார்வையிட்டு அறிக்கையிட்டார்.
நேற்றுக் காலையில் நிலக்சிகாவின் தாயார் வேலைக்குச் சென்றதுடன் சகோதரர்களும் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.
நிலக்சிகா பாடசாலை செல்வதாகக்கூறி விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் பாடசாலைவிட்டு 1.40 மணியளவில் வீடு வந்தபோதுதான் நிலக்சிகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டுள்ளனர். இம்முறை க.பொ.த. சாதா ரண தரப் பரீட்சை எழுதவிருந்த இம்மாணவியின் மரணம் குறித்து சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.