இலங்கையின் முதல் கொரோனா பலி; சடலம் எரியூட்டப்பட்டது!

0
691

இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்த தர்மசிறி ஜனானந்த என்ற நபரின் உடல் சர்வதேச சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் கொட்டிகாவத்தை மயானத்தில் எரியூட்டப்பட்டது.
கொவிட்-19 தொற்றுடன் யாரும் இறந்தால், அவரின் மரண சடங்கு குறித்து அரச மருத்துவர்கள் சங்கம் பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.

இதன்படி மரணசடங்கு பெரும் கூட்டத்துடன் நடத்தப்பட அனுமதியில்லை.

24 மணி நேரத்துக்குள் கடமைகளை முடிக்கவேண்டும்.

உடற்கூற்று பரிசோதனைகள் அவசியமில்லை. அதேநேரம் எம்பம் செய்வதற்கு கட்டாய தடை.
IDH அல்லது அடையாளம் காணப்பட்ட சில வைத்தியசாலைகளிலேயே நோயாளர் மரணம் நிகழக்கூடும்.

தகனக்கிரியை, MOH அல்லது PHI கண்காணிப்புடன் இடம்பெற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here