பிரித்தானியாவில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலாக வாய்ப்பு!

0
320

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளை அடுத்து தற்போது பிரிட்டனையும் கொரோனா வைரஸ் பாரிய அளவில் தாக்கியுள்ளது.

இந்த நிலையில் பிரிட்டனில் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும்.

இதனை அடுத்து எத்தனை மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது என்பது குறித்து பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது

பிரிட்டனின் பிரதமரே தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளும் அமைச்சர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அந்நாடே முடங்கி விடும் என்றும் நாட்டு மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

கொரோனா வைரஸில் இருந்து காப்பாற்றப்படுகிறார்களோ இல்லையோ பலர் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்றும் உளவியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் மக்களின் உயிரை காப்பாற்ற இது ஒன்றுதான் வழி, வேறு வழி இல்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here