வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உழவு வேலைக்காக உழவு இயந்திரத்தை செப்பனிட்டுக் கொண்டிருந்தவேளை தவறுதலாக உழவு இயந்திரம் இயங்கியமையினால் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மற்றையவர் ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நேற்றுக் காலை உழவு வேலைக்காக உழவு இயந்திரத்தில் கலப்பையை சரிசெய்துகொண்டிருந்தவேளை உழவியந்திரம் திடீரென முன்னோக்கி செல்லத்தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக உழவு இயந்திரத்திற்கு அருகாமையில் அமர்ந்திருந்த உழவு இயந்திரத்தின் உரிமையாளரின் மாமனாரான பொன்னம்பலம் (வயது 80) மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார். இதன்போது உழவு இயந்திரத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட அதன் உரிமையாளரான சி.செல்வரட்ணம் ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Home
ஈழச்செய்திகள் உழவு இயந்திரத்தை செப்பனிட்டபோது விபத்து: மாமன் பலி; மருமகன் ஆபத்தான நிலையில்!