மட்டக்களப்பு சித்தாண்டிப் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

0
387

மட்டக்களப்பு நகரத்திலிருந்து வடக்குத் திசையாக 13 மைல் தொலைவில் சித்தாண்டிக் கிராமம் அமைந்துள்ளது. இந்து மதத்தவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயம் அமைந்த இக்கிராமம் வளங்கள் நிறைந்ததும் மக்கள் செறிந்து வாழும் ஓர் இடமாகவும் உள்ளது. இங்கு வாழும் மக்களின் பிரதான பொருளாதாரம் விவசாயம் ஆகும்.

இக்கிராமத்தின் 3ம் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமிலுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் 29.03.2007 வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் மோட்டார் பீரங்கித் தாக்குதலினை மேற்கொண்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் மற்றும் இரண்டு வயதுக் குழந்தைகள் இரண்டு என ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எட்டு வீடுகள் பலத்த சேதங்களிற்கு உள்ளாகியுள்ளன.

இச்சம்வத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்கள்:

  1. நல்லம் தவமணி (வயது 30)
  2. நல்லம் நிரேஜா (வயது 02)
  3. பேரின்பராசா ரஞ்சிதா (வயது 02)
  4. பேரின்பராசா சசிக்குமார் (வயது 15)
  5. பேரின்பராசா வசந்தகுமார் (வயது 18)
  6. அழகையா விஜயலக்சுமி (வயது 42)
  7. நாகமணி தம்பித்துரை (வயது 42)
  8. இளையதம்பி சின்னத்துரை (வயது 50)

நன்றி – ‘ஓவியம்’ ஓவியர் புகழேந்தி ஐயா.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 2002 – 2008 நூல்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here