சுவிஸில் புங்குடுதீவு குடும்பஸ்தர் கொரோனாவிற்கு பலி!

0
2101

உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம்தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய சதாசிவம் லோகநாதன் என்பவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுவிஸ் செங்காளன் ஜோனா என்னும் பகுதியில் ஒரு வெதுப்பகத்திற்கு அதாவது பேக்கரிக்கு மேலுள்ள குடியிருப்புத் தொகுதி ஒன்றில் 5 அறைகளில் ஓர் அறையில் தங்கியிருந்த மேற்குறித்த நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிச் நகருக்கு சென்று வந்ததுள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்பு கொண்ட போது வைத்தியர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு தெரிவித்திருக்கின்றனர்.

அதனையடுத்து தனிமைப் படுத்தப்பட்டிருந்த அவர் நேற்று மாலை ஆகியும் அவருடைய அறையில் எந்தவொரு சலனமுமின்றி இருந்ததனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸாரும், வைத்தியப் பிரிவினரும் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவரது சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த லோகநாதன் அவர்களின் குடும்பத்தினர் புங்குடுதீவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரின் சகோதரி இருவர், சகோதரர் ஒருவர் பேர்ண் பகுதியிலும், மருமகள் உறவு முறையில் உள்ள ஒருவர் பிரான்ஸ் நாட்டிலும் வசித்து வருகின்றனர்.

லோகநாதன் நீரிழிவு நோயாளி எனவும் அவர் ஒரு சுவிஸ் உணவகத்தில் வேலை செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு “கொரோனா வைரஸ்” தாக்குதலுக்கு உள்ளாகிய அறிகுறி தென்பட்ட போதிலும், சுவிஸ் அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தாமல், இருவாரத்துக்கு அவரது அறையிலேயே தனித்து இருக்கும்படி தெரிவித்து உள்ளனரென அதே கட்டிடத்தில் உள்ள அவரது நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அக்குடியிருப்புத் தொகுதியில் அறையில் தங்கியிருக்கும் மற்றொரு யாழ்ப்பாணத் தமிழர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here