தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை தென்னாபிரிக்கா ஓரங்கட்டியதன் சூட்சுமம் என்ன?

0
202

2-SA

தமிழீழத் தனியரசுக் கொள்கையில் உறுதியாக நிற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைப் புறந்தள்ளிவிட்டு ஏனைய புலம்பெயர் அமைப்புக்களுடன் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகளை தென்னாபிரிக்கா மேற்கொண்டிருப்பது உலகத் தமிழர்களிடையே பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

நேற்று 25.05.2015 திங்கட்கிழமை இலண்டனில் தென்னாபிரிக்க வெளியுறவு மற்றும் ஒத்துழைப்புக்கான துறையின் துணை அமைச்சர் நொமைன்டியா எம்பெக்ரோ அவர்களின் தலைமையிலான தூதுக் குழுவினர், சிறீலங்காவில் நீதிக்கும் சமாதானத்திற்குமான தென்னாபிரிக்க தோழமைக் குழு, பிரித்தானிய தமிழர் பேரவை, ஐக்கிய அமெரிக்க தமிழ் நடவடிக்கை அமைப்பு, உலகத் தமிழர் பேரவை, அனைத்துலக ஈழத்தமிழர் அவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.3-SA

எனினும் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக்கள் எதுவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கோ, அன்றி அதன் கிளை அமைப்புக்களுக்கோ விடுக்கப்படவில்லை.

தமிழீழத் தனியரசுக் கோரிக்கையில் உறுதியாக நின்றவாறு தமிழீழ தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளை முன்னிறுத்திப் புலம்பெயர் தேசங்களில் நீண்ட காலமாகக் குரலெழுப்பி வரும் அமைப்பு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகும்.

அதனைப் புறந்தள்ளிவிட்டு 2009 மே 18இற்குப் பின்னர் அல்லது அதற்கு முன்னரான சில மாதங்களுக்கு முன்னர் உருவாகிய அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை தென்னாபிரிக்கா தொடங்கியிருப்பது ஈழப்பிரச்சினையில் அது வகிக்க விரும்பும் பாத்திரம் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை ஆயுதபாணிகள் என்று விளித்தும், சிங்கள அதிபர் மைத்திரிபால சிறீசேனவை மேலெழுந்து வரும் தேசப்பற்று மிக்க இராசதானகர் என்று புகழாரம் சூட்டியும் இம் மாதம் 18ஆம் நாளன்று பாராட்டு அறிக்கையை உலகத் தமிழர் பேரவையின் தலைவர் எஸ்.ஜே.இம்மானுவேல் விடுத்திருந்த பின்புலத்தில் தற்பொழுது இப்பேச்சுவார்த்தை நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – சங்கதி24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here