ரஷ்யாவில் கடலுக்கு அடியில் 35கி.மி ஆழத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.8 பதிவாகியுள்ளதலால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சுனாமி வரும் என எச்சரித்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளிலும் சுனாமி வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர். கொரோனா ஒரு பக்கம் உலகை அச்சுறுத்த மறுபக்கம் சுனாமி வந்து விடுமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.
ஒரு பக்கம் கொரோனா வைரஸ், மறுபக்கம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பீதி. 2020 அழிவை நோக்கி செல்கிறதா என மக்களிடம் அச்சம் ஏற்பட்டு வருகிறது.