சீனாவில் ஹண்டா வைரஸ் (Hanta virus) எனும் ஒருவகை வைரஸினால் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
யுனான் மாகாணத்தைச் சேர்ந்த மேற்படி நபர், ஷாங்டோங் மாகாணத்தில் தனது தொழிலுக்காக பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அந்நபருக்கு ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை தெரிய வந்தது. அதையடுத்து மேற்படி பேருந்தில் பயணம் செய்தவர்கள் பரிசோதிக்கப்பட்டபோது, பேருந்திலிருந்த மேலும் 32 பேருக்கு ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகில் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் சீனாவில் இந்த ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
எனினும், ஹண்டா வைரஸ் புதியது அல்ல எனவும், பல தசாப்தங்களாக இவ்வைரஸ் மனிதர்களிடையே தொற்றிவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் எலிகள் மூலம் பரவும் நோயாகும்.
அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டில் 10 பேருக்கு இத் தொற்று ஏற்பட்டதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 7 மாநிலங்களில் 17 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டதாக வெளியான தகவல்கள் குறி;த்து விசாரிப்பதற்கு அந்நிலையம் உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.