இன்றையதினம் முல்லைத்தீவு பகுதியிலும் அதை அண்டிய பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் இளைஞர் யுவதிகள் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் இன்றைய தினம் பொதுமக்கள் முகக் கவசங்கள் இல்லாமல் வீதிகள் மற்றும் வங்கிகள் முதலான பொது இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் மக்களின் இக்கட்டான நிலை அறிந்து தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினரால் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் மற்றுமோர் மனிதாபிமான பணியாக தண்ணீரூற்று பகுதியில் வசிக்கின்ற அன்றாடம் கூலி வேலை செய்கின்ற 15 குடும்பங்களுக்கு அரிசி,மா,சீனி,பருப்பு முதலான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு இக்கிராமத்தில் வசிக்கின்ற குடும்பங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு ஓர் நீர் தாங்கும் வழங்கிவைக்கப்பட்டன.