யாழ் புங்குடுதீவில் மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுவிட்சர்லாந்து கண்டித்துள்ளது.
இந்த கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என தமது அரசாங்கம் நம்புவதாக கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் அறிவித்துள்ளது.
அத்தோடு இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவரும் அடங்குவதாக வெளியான தகவல்களை தூதரகம் மறுத்துள்ளது.
இலங்கை பிரஜையான இந்த சந்தேகபருக்கு சுவிட்சர்லாந்தில் வசிப்பதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சுவிட்டசர்லாந்து தூதகரம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.