
தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும், இணையவழி மூலமாகக் கல்வி கற்பிக்கப்படலும், பயிற்சிகள் வழங்கப்படலும் தொடர்ந்து வருகின்றன. காணொளி மூலமான கற்கையும் நடைபெற்று வருகின்றது.
பிரான்சில் கல்வி கற்கும் 12 மில்லியன் மாணவர்களுடன் இணைந்து, எட்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ஆசிரியர்கள் தொடர்ந்து கல்வி கற்றை மேற்கொண்டு வருவதாகப் பிரான்சின் கல்விமைச்சர் ஜோன்-மிசேல் புளோங்கியே தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களிற்கும் மாணவர்களிற்கும் இடையில் தொடர்புச் சங்கிலி அறாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர்.
மேலும் மீண்டும் பாடசாலைகள் தொடங்குவதற்கான திகதியாகத் தற்போது 4ம் திகதி மே மாதமே பொருத்தமாக இருக்குகம் எனக் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் கோடை விடுமறை நாட்கள் குறைக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு, எக்காரணம் கொண்டும் விடுமுறை நாட்கள் குறைக்கப்படமாட்டாது எனக் கல்வியமைச்சர் உறுதியளித்துள்ளார்.