தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 1945-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.
தொலைக் காட்சியில் விசு நடாத்திய’அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. யுத்த காலத்தில் அதில் ஈழத்தமிழர்கள் பற்றிய பேச்சும் உலவும். இந்தியாவே அடங்கியிருக்கும் இக்காலத்தில் இவரது இறுதிக் கிரியைகள் மெளனமாகவே நடந்தேறலாம். கொரோனா மட்டும் உயிர்களைக் காவவில்லை. உலகில் நாளாந்தம் கொரோனாவிலும் அதிகமான மரணிப்புகள் நடந்தபடியே உள்ளன.