சுவிட்ஸர்லாந்தில் இருந்து அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த போதனைக்கு வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த போதனை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுவிஸ்சர்லாந்து போதகரை தனியாக அறையில் சந்தித்தவருக்கே இவ்வாறு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்.