ஜனநாயக நாட்டில் ஊர்வலம் நடத்த உரிமையுண்டு. ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள், வன்முறைகள் ஏற்படாது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமை.என்கிறார் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மா.கணேசராசா தெரிவித்தார். நாளை திக்கம் பகுதியில் ஊர்வலம் ஒன்று நடைபெறவிருப்பதாகவும் அந்த ஊர்வலத்தில் திக்கம், பொலிகண்டி, சக்கோட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் திருகோணமலை, கற்பிட்டிப் பகுதிகளைச் சேர்ந்தோரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர் எனவும் புலனாய்வுப் பொலிஸார் எமக்குத் தகவல் தந்துள்ளார்கள்.
எவவே பாதுகாப்புக் கருதி குறித்த ஊர்வலத்தைத் தடை செய்யவேண்டும் என்று கோரி பருத்தித்துறைப் பொலிஸார் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பம் தொடர்பாக ஆராய்ந்த பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பொலிஸாருக்குத் தெரிவிக்கையில், ஜனநாயக நாட்டில் ஊர்வலம் நடத்த எவருக்கும் உரிமையுண்டு. ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள், வன்முறைகள், பொதுமக்கள் மற்றும் அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றால் சம்பந்தப்பட்டோரை உடன் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதோடு, ஊர்வலத்தின் பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் பொலிஸார் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.