பிரான்ஸில் முதல் தடவையாக Nice நகரில் இன்றிரவு ஊரடங்கு(couvre-feu) அமுலுக்கு வருகிறது.
ஏற்கனவே நாடுமுழுவதும் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் ஆட்கள் வீடுகளை விட்டு வருவதை முற்றாக நிறுத்தும் நோக்கில் இந்த உத்தரவை நகர மேயர் விடுத்திருக்கிறார்.
இரவு 8 மணிக்கு நடைமுறைக்குவரும் ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. இந்த சமயத்தில் கடைகள், மருந்தகங்கள் அனைத்தும்கூட மூடப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் தெற்கு கடற்கரையோரம் – இத்தாலிக்கு அண்மையில் – அமைந்துள்ள Alpes-Maritimes பிராந்தியத்தின் தலைநகரான Nice நகரம் உல்லாசப்பயணத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். அதன் புகழ்பெற்ற கடற்கரைகள் மூடப்பட்டிருக்கின்றன.
மற்றொரு கடற்கரை நகரமான Cannes நகரில் வரும் மே மாதம் நடைபெறவிருந்த சர்வதேச திரைப்பட விழா (Cannes film festival) ஏற்கனவே ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.
(குமாரதாஸன்)