இலங்கை, இந்திய இராணுவ ஆக்கிரப்பிற்கு எதிராக 19.03.1988 முதல் 19.04.1988 வரை உண்ணா நோன்பிருந்து தேசத்தின் விடுதலைக்காக மூச்சுக் கொடுத்த தியாக தீபம் அன்னை பூபதி அம்மா!

ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும்,ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தி உயிர்த் தியாகம் செய்திட்ட உலகின் முதற் பெண்மணி என்ற வகையிலும்,ஒரு சாதாரணக் குடும்பப்பெண் தனது தனிப்பட்ட வாழ்வைத் துறந்து தனது நாட்டுக்காக முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் என்ற வகையிலும் அன்னை பூபதி அவர்களின் போராட்டம் பல விழுமியங்களை தொட்டு நிற்கின்றது.