தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா நேற்று மாலை 3 மணியளவில் தலைமை செயலகம் வந்தார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதும் அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.
நேற்று கோட்டைக்கு வந்த ஜெயலலிதா வீடியோ கொன்பரன்ஸ் மூலம் 154 அம்மா உணவகங்கள் மற்றும் பல கட்டடங்களை திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சியில் 2013 மார்ச், 19ம் திகதி மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள், மருத்துவமனைகளில் 27 உணவகங்கள் என 20 கோடி ரூபாய் செலவில் 154 உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள உணவகங்கள் நேற்று திறக்கப்பட்டன. தலைமை செயலகம் வந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள்; அதிகாரிகள் வரவேற்றனர்.