
பாரிஸ் நகரில் நம்மவர்களால் white church என்று பொதுவாக அழைக்கப்படும் பிரபல திரு இருதய தேவாலயம் (Basilica of the Sacred Heart) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நகரின் மொன்மார் (Montmartre Hill) குன்றின் மீது அமைந்துள்ள இந்த தேவாலயம் உலக அளவில் உல்லாசப் பயணிகளிகளை கவர்ந்த ஒரு கேந்திர நிலையமாகும்.
மக்கள் நடமாட்டங்களை முடக்கி நாடு ஒரு பெரும் சுகாதாரப் போரில் ஈடுபட்டிருப்பதை கவனத்தில் கொண்டு தேவாலயம் மூடப்படுகிறது என்று ஆலய நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
1914 இல் கட்டப்பட்ட இந்த பேராலயம் பொதுமக்களுக்கு மூடப்படுவது இதுவே முதல் முறை என்று அதன் பங்குத்தந்தை குறிப்பிட்டிருக்கிறார்.
பிரான்ஸ் முழுவதும் பெரும்பாலும் தேவாலயங்கள் திறந்திருக்கின்றன. எனினும் வழிபாடுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு, சுகாதார விதிகள் இறுக்கமாகப் பின்பற்றப்படுகின்றன.
நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள பிரபல லூர்து மாதா தேவாலயம் ஏற்கனவே மூடப்பட்டிருப்பது தெரிந்ததே.
- குமாரதாஸன்.