கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு சுயாதீனமாக இளைஞர்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கான தயார்படுத்தல் மற்றும் ஆலோசனை செயலமர்வு பயிற்சி முகாம் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்களால் வழங்கப்பட்டது.

இதில் தன்னார்வ மக்கள் பணியாளர்கள் , இளையோர் செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் சார்ந்த பிரதிநிதிகள், உலகத் தமிழர் மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதிகள் இளம் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர் வரும் நாட்களில் இப்பயிற்சியை மேற்கொண்டவர்கள் சமூக மட்டத்தில் மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று கொரோனா பற்றிய தெளிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதற்கான நெறிப்படுத்தல்களை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி dr.சத்தியமூர்த்தி அவர்கள் மேற்கொண்டார்.