
வீடுகளில் இருந்தவாறு ஜன்னல்கள் வழியே கைகளைத்தட்டி பெரும் கரவொலி எழுப்பி மருத்துவப் பணியாளர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர் பிரெஞ்சு மக்கள்.
பாரிஸ் நகரிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்றிரவு சரியாக எட்டு மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது
கொடிய வைரஸ் தொற்றை தடுக்கவும் ஆயிரக்கணக்கான நோயாளர்களை பராமரித்து சிகிச்சை அழிக்கவும் தம் உயிரை மதிக்காமல் ஓய்வின்றிப் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மற்றும் மருத்துவத் துறைசார் சேவையாளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் கரவொலி எழுப்பப்பட்டது.
(குமாரதாஸன்)