யாழ்.சிறைச்சாலைக்கு கைத்துப்பாக்கி உட்பட 5 துப்பாக்கிகள் சிறைச்சாலைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டன. யாழ்.நகரில் கடந்த புதன்கிழமை நடந்த போராட்டத்தின் போது நீதிமன்றத்தின் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் போது சிறைச்சாலைக்குச் சொந்தமான கைதிகள் பரிமாற்ற பரிமாற்ற பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டது. மேலும் 3 கைத்துப்பாக்கி உள்ளிட்ட 5 துப்பாக்கிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளன. அதுவரை யாழ்.சிறைச்சாலையில் அத்தகைய துப்பாக்கிகள் இருந்ததில்லை.அதற்குத் தேவையும் ஏற்பட்டிருக்கவில்லை.