
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஓர் அங்கமாக அமொரிக்கா மற்றும் கனடா ஆகியன தங்கள் தங்களது எல்லைகளை இன்று முதல் தற்காலிகமாக மூட பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளன.
அத்தியாவசியமற்ற பயணங்களைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் இன்று புதன்கிழமை அறிவித்தார்.
அமெரிக்கா – கனடா இரு நாடுகளும் தங்கள் நாடுகளில் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் அவற்றின் முக்கிய பொருளாதார உறவையும் பராமரிக்கின்றன. கனடா அதன் ஏற்றுமதியில் 75% அமெரிக்காவைச் சார்ந்து உள்ளது.
இவ்வாறான நிலையில் எல்லைகளை மூடும் இந்த முடிவு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஓட்டத்தை பாதிக்காது என தனது ருவிட்டரில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 6,500 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 110 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளக.
கனடாவில் 600 போ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், எட்டு இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.