
பிரான்ஸின் புகழ்பெற்ற லூர்து மாதா ( Sanctuaire de Lourdes) தேவாலயத்தையும் மூடவைத்திருக்கின்றது கொரோனா!
ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து பல மில்லியன் கணக்கான யாத்திரிகர்களை ஈர்க்கும் லூர்து திருத்தலம் அதன் சரித்திரத்தில் முதல் தடவையாக இழுத்து மூடப்படுகிறது என்று ஆலயத்தின் ருவீற்றர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரான்ஸின் பெருநிலப்பரப்பு முழுவதும் நடமாட்டம் முடக்கப்பட்டு தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமுல் செய்யப்பட்டுவருவதை அடுத்தே மறு அறிவித்தல் வரை மாதா தேவாலயம் யாத்திரிகர்களுக்கு மூடப்படுகிறது.
வரும் ஏப்பிரலில் யாத்திரைக் காலம் ஆரம்பமாகவுள்ள தருணத்தில் மாதா ஆலயம் மூடப்படுவது ஒர் ‘அனர்த்தம்’ என்று லூர்து நகர மேயர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
நன்றி: குமாரதாஸ்.