கொரோனா பீதியின் எதிரொலி:யாழில் வந்து குவியும் ஈமைப் பேழைகள்!

0
462

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். அவசர அவசரமாக அத்தியாவசியப் பொருட்களை கடைகளில் வாங்கி சேமித்து வருகின்றார்கள்.

இந் நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான ஈமைப் பேழைகள் வரவழைக்கப்பட்டு, பதுக்கப்படுகின்றன என சமூகவலைத் தளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.

தமிழர் தாயகப் பகுதிகளையே சிறிலங்கா அரசு இலக்குவைத்திருப்பதாக பல பகுதிகளில் கொரோனா சோதனை மையங்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் நிலையில் இத்தகவல் வெளியாகி உள்ளமை அனைவரையும் மேலும் சிந்திக்கவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here