பிரான்சில் நடமாடுவதற்கான காரணத்தை சரியாக நிரூபிக்காதவிடத்து தனிநபர் ஒருவர் 135 ஈரோக்களை அபராதமாக செலுத்த நேரிடும்.
கொரோனா வைரஸ் பரம்பலின் வேகத்தை தணிப்பதற்காக சுகாதார நிபுணர்களின் ஆலோசனையுடன் பிரான்ஸ் தேசம் முழுவதும் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டிருக்கிறது.
இன்று நண்பகல் நடைமுறைக்குவரும் கட்டுப்பாடுகளின் படி எத்தகைய அவசிய தேவைகளுக்காக ஒருவர் வெளியே நடமாட முடியும் என்ற விவரங்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
*தொழிலுக்கு செல்வதற்காக ஒருவர் வெளியே நடமாட முடியும். ஆனால் அவரது பணியிடம் குறுகிய பயணத்தூரத்துக்குள் இருக்க வேண்டும். தவிர தொலைவில் இருந்து பணியாற்றுவதை(telework) ஊக்குவிக்குமாறே தொழில் வழங்குநர்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
*நாட்பட்ட, தீவிர நோய்களுக்கு வீட்டில் இருந்தவாறு தாங்களே சிகிச்சை செய்து கொள்பவர்கள் மருந்து தேவைகளுக்காக வெளியே வர அனுமதிக்கப்படுவர். சுவாச தொற்று நோய் அறிகுறிகள் காணப்படுவோர், அல்லது 37. 5 பாகைக்கு மேல் காய்ச்சல் கண்டோர் வீட்டிலேயே தங்கி இருந்து கொண்டு மருத்துவர்களை அழைக்க வேண்டும். மருத்துவரின் இருப்பிடம் நாடிச் செல்லக்கூடாது.
*வலுவிழந்தோர் மற்றும் பிறர் உதவியில் தங்கிவாழ்வோரை சென்று பார்த்து பராமரிக்க வேண்டிய தேவையடையோர் வெளியே நடமாடலாம்.
*மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தோர், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர்.
*இருப்பிடங்களுக்கு அருகே உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி ஆரோக்கிய நடை(Jog) போன்றவற்றை தனி நபராக மேற்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் சுகாதார கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பேணவேண்டும். ஆட்களை சந்திப்பதற்காக அல்லது கூட்டமாக இவற்றில் ஈடுபட முடியாது.
*அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வெளியே வர முடியும்.வர்த்தக நிலையங்களில் வரிசைகளில் நிற்பார் உரிய இடைவெளி பேணுவதுடன் சுவாச முகக் கவசங்களை அணிந்திருத்தல் நல்லது.
*வளர்ப்பு பிராணிகளை (நாய்) வெளியே கூட்டி வருவதற்காக தனியே ஒருவர் நடமாட அனுமதி உண்டு.
நடமாடும் அனுமதி தொடர்பான மேலும் விவரங்களை உள்துறை அமைச்சின் இணையப் பக்கத்தில் பார்வையிடலாம்.
தனிநபர் ஒருவர் 135 ஈரோக்களை அபராதமாக செலுத்த நேரிடும்.