பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று திங்கட்கிழமை மாலை கொரோனா நுண்ணங்கிக்கு எதிராக “நாங்கள் போரில் இருக்கிறோம்” என்று கூறினார். அவர் பிரான்ஸ் மக்களுக்கு மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
“நாங்கள் போரில் இருக்கிறோம், ஒரு சுகாதாரப் போர், நிச்சயமாக, ஆனால் ஒரு போர்” என்று தெரிவித்த ஜனாதிபதி , பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய மற்றும் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்தார்.
“நான் உங்களை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறேன். கொரோனா வைரஸ் பரவுவதை குறைப்பதற்கான மக்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை இன்னொரு முறை அறிவிப்பதாக மக்ரோன் கூறினார்.
“நாளை செவ்வாய்க்கிழமை முதல், நண்பகலில், அனைத்து இயக்கங்களும் வெகுவாகக் குறைக்கப்படும்.”
பிரான்ஸ் 15 நாள் பூட்டப்பட்டிருக்கும், ஜனாதிபதி அனைத்து செயற்பாடுகளையும் கண்டிப்பாக – அவசியமாகக் குறைப்பதற்குப் பணித்துள்ளார்.
“நீங்கள் மருத்துவ உதவியைப் பெறவும், நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமானால் உடல் ரீதியாக நன்றாக இருக்கவேண்டும், ஆனால், நீங்கள் தெருவில் உள்ள நண்பர்களை சந்திக்க முடியாது” என்று ஜனாதிபதி உறுதியாகக் கூறினார்.
“எல்லோரும் ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைய வேண்டும்: தொற்றுநோய் பரவுவதை மெதுவாக்குங்கள்” என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
“அரசாங்கத்தின் ஆலோசனையை மக்கள் மதிக்கவில்லை, பூங்காக்கள் மற்றும் மதுக்கடைகளுக்கு தொடர்ந்து செல்வதை நாங்கள் கண்டிருக்கிறோம்.”
“ஆலோசனையைப் பின்பற்றாத உங்கள் அனைவருக்கும், நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளாதது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் பாதுகாக்கவில்லை.”
அனைவரும் யுத்தத்தில் உள்ளோம் யுத்த பிரகடனத்தை செய்துள்ள அதிபர் ஏமானுவல் மக்ரோன், நாளை செவ்வாய் 12 மணிமுதல் பொதுமக்கள் அர்ப்பணிப்புடன் கடைப்பிடிக்க வேண்டிய புதிய கட்டுபாடுகளை அறிவித்துள்ளார்.
வைரஸ் தொற்றின் வேகத்தை குறைப்பதே இன்றைய முக்கிய தேவை என்பது மட்டுமல்லாது, மனிதர்களின் உயிர்களை காத்துக் கொள்வதும், மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினை குறைப்பததும் ஒவ்வொருவரதும் பொறுப்பெனத் தெரிவித்துள்ள அதிபர், நாளை செவ்வாய்க்கிழமை மதியம், 12 மணிமுதல் முக்கிய தேவைகள் தவிர வெளியில் நடமாடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ எவ்வாறாயினும் கூடுவதும், நடமாடுவதும் முற்றாக தடை செய்யப்படுவதோடு, இதனை மீறுபவர்கள் தண்டனைக்கும், தண்டத்துக்கும் உள்ளாக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
வதந்திகளைக் கண்டு பதட்டப்படாமல் வீடுகளில் இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ள அதிபர், நாம் அனைவரும் கூட்டாக அர்பணிப்புடன் இந்த நெருக்கடியினை எதிர்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை இரவு, பாதிக்கப்பட்ட 25 பிராந்தியங்களின் மருந்தகங்களுக்கு சுவாசகவசங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாகவும், புதன்கிழi பிற பிற பிராந்தியங்களில் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்துக்கு எதிராகவோ அல்லது இன்னுமொரு நாட்டுக்கு எதிரானதோ ல்ல இந்த யுத்தம் என குறிப்பிட்ட அதிபர் ஏமானுவல் மக்ரோன், கண்ணுக்கு புலப்படாத வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் போர் பிரகடனம் செய்கின்றோம் என்றார்.
இந்த யுத்தத்தல் வெல்ல அனைவரையும் தேசமாக திரள அழைப்பு விடுத்த அதிபர், தோழமையுடன் எழுவோம் என்றார்.
இதேவேளை நாளை மதியத்தில் இருந்து ஐரோப்பிய எல்லைகள் மூடப்படுவதோடு, அனைத்கு பயணங்களும் தடை செய்யப்படுகின்றன எனவும் தெரிவித்திருந்ததோடு, வெளிநாடுகளில் உள்ள பிரென்சு குடிமக்கள் நாட்டுக்கு திரும்ப, தூதரகங்கள் ஊடாக வழிசெய்யப்படும் என்றார்.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், வரும் ஞாயிறன்று இடம்பெற இருந்த இரண்டாம் சுற்றுத் தேர்தல், ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்த அதிபர், ஓய்வூதிய சீர்திருத்தம் செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.
சமூக, சுகாதார,பொருளதார நெருக்கடியினை தேசம் எதிர்கொண்டுள்ளது என குறிப்பிட்ட அதிபரின் உரையில், அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான சலுகைகளை அறிவித்திருந்ததோடு, சிறு நிறுவனங்கள், வாடகை, தண்ணீர், மின்சாரம் ஆகியன கட்டத்தேவையில்லை என தெரிவித்தார்.
6600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதோடு, 400 பேர் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்த்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
“நாம் எவ்வளவு விரைவாக ஒன்றிணைந்து செயல்படுகிறோமோ இந்த வைரஸை வெல்வோம்.”
“நான் பயப்பட வேண்டாம் என்று கேட்கிறேன். நாங்கள் வெல்வோம்.” – என்றார்.