தொடரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஜெர்மனி பல நாடுகளுடன் எல்லைகளை மூட உள்ளது. பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றுடன் நாட்டின் எல்லைகளில் கட்டுப்பாடுகளுடன் மூட ஜேர்மன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அவசர காரியங்கள் கருதி பயணிக்கும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் கொரொனோ வைரசினால்1,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டென்மார்க்கைத் தொடர்ந்து கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இன்று திங்கள்கிழமை காலை 08.00 மணியிலிருந்து ஜெர்மனியும் தனது டென்மார்க் எல்லையை மூட முடிவு செய்துள்ளது. அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டுமே டென்மார்க்கிலிருந்து ஜெர்மனி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஐரோப்பாவிலிருந்து வரும் பயணிகள் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் குழப்பத்தையும், அமெரிக்க விமான நிலையங்களில் பல மணிநேர தாமதத்தை ஏற்படுத்துவதாக பயணிகள் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.