அதிபர் மக்ரோன் இரண்டாவது தடவையாக இன்றிரவு 8.00 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
எலிஸே மாளிகை இதனை அறிவித்துள்ளது.
பிரான்ஸில் வைரஸ் தொற்று நிலைமை மிக வேகம் கொள்வதை அடுத்து பொதுமக்களுக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று நண்பகல் பாதுகாப்புச் சபைக் கூட்டம் அதிபர் தலைமையில் எலிஸே மாளிகையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அவர் தனது உரையில் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.