பிரான்சில் ஈபிள் கோபுரமும் மூடப்படுகிறது!

0
428

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈபிள் கோபுரமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னதாக டிஸ்னிலேண்ட் கேளிக்கை மூடப்பட்டதோடு, நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் லூவர் அருங்காட்சியகமும் மூடப்பட்டது. மார்ச் தொடக்கத்தில் இந்த அரங்காட்சியகம் மூடப்பட்டபோதும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் நிலையில் இந்த அருங்காட்சியகம் மூடப்படுகிறது.

இந்நிலையில், பிரான்சின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரமும் மூடப்படுகின்றது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியுடன் Covid-19 வைரஸ் காரணமாக ஈபில் கோபுரம் மூடப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, Palace of Versailles ம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here