கனேடிய பிரதமர் குடும்பத்தையும் விட்டுவைக்காத கொரோனா!

0
519

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

இதனையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ இரு வாரங்களுக்குத் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

பிரதமரின் மனைவி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கனேடிய பிரதமரின் மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமர் தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை. அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரை காரணமாக பிரதமர் தனது உடல்நிலையை அவதானித்தவாறு நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். அவர் வீட்டிலிருந்து பணிபுரிகிறார் என அறிக்கையொன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மனிதநேயமும் தமிழர்களின் மீதும் ,தமிழ் பண்பாட்டின் மீதும் அளவற்ற பற்றும் பாசமும் கொண்ட உங்களுக்காக நாங்களும் இறைவனை பிரார்த்திக்கின்றோம் என சமூக வலைத் தளங்கள் ஊடாக தமிழ் மக்கள் தமது நன்றியறிதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here