கொரோனா கலக்கம்: யாழில் வர்த்தக நிலையங்களில் அலைமோதும் மக்கள்!

0
428

தம்பி ஏன் கியூவில நிக்கிறியள்

கொறோனோ நோயாளியள் 2 பேரை அடையாளம் கண்டுட்டாங்களாம். யாழ்ப்பாணத்துக்கும் வந்தா கஸ்ரம்தானே

அதுக்கு ஏன் பெற்றோலுக்கு வரிசையில் நிக்கிறியள்?

ஒரு வேளை கொரோனா பரவிச்செண்டா வெளியில வெளிக்கிட அரசாங்கம்விட மாட்டுது. 2, 3 கிழமைக்கு வீட்டுக்க தான் இருக்க வேண்டி வரும் எண்டு சனம் கதைக்குது. அதுதான். தட்டுப்பாடு வந்தாலும் எண்டு.

2, 3 கிழமைக்கு வீட்டுக்கயே இருக்க வேண்டிவரும் எண்டா வெளியில வெளிக்கிடமாட்டியள் தானே. பிறகு ஏன் கான் #கணக்கில #பெற்றோல் வாங்கிறியள்.

நீங்கள் சொல்லுறது சரிதான். ஆனாலும் எல்லாச் சனமும் வேண்டி வைக்கேக்க நாங்களும் வாங்கத்தானே வேணும். பிறகு தட்டுப்பாடு வந்தா?

சரி. என்னெண்டான்ன செய்து துலயுங்கோ.

ஈரானில் அமெரிக்க விமானத் தாக்குதல் நடாத்திய போது யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் சனம் அலைமோதியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். தற்போது கொறோனா வைரஸ் தாக்கம் என கூறி அதற்கு எச்சரிக்கையாக பாடசாலைகளை அரசாங்கம் மூடியதையடுத்து பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் சனங்களால் நிரம்பி வழிகின்றனஇவ்வாறான சுத்த முட்டாள்தனமான செயற்பாடுகளை சனம் எப்போதுதான் நிறுத்தப் போகின்றதோ தெரியாது என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

யாழில் வர்த்தக நிலையங்களை நோக்கி படை எடுக்கும் மக்கள், அடிப்படை பொருட்களை களஞ்சியப்படுத்தல் முக்கியம் என்கிறார்கள்.

கொரொனா தாக்கத்தால் நாட்டிற்குள் சரக்கு கப்பல் வராது என தாமே தீர்மானித்து விட்டனர்.

வர்த்தகர்கள் மக்களின் இச்செயல் மீது முகம் சுழிக்கின்றனர், நிலவரம் அவ்வாறு இல்லை எனவும் கூறி மக்கள் செவிசாய்ப்பதாக இல்லை.

அன்றாடம் உழைத்து அடுப்பு மூட்டும் மக்களும் இதே சமூகத்திற்குள் வாழ்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here