பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக திங்கட்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள் யாவும் மூடப்படுகின்றன என பிரான்சு அதிபர் அறிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பிரான்சு அதிபர் நாட்டு மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை அறிவித்துள்ளார்.
அதிபர் மக்ரோனின் கட்டளைகள் பின்வருமாறு :
– திங்கட்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள் யாவும் மூடப்படுகின்றது.
வேலைப்பளு காரணமாக பிள்ளைகளை வீடுகளில் பராமரிக்க முடியாதவர்களின் தேவைகளுக்கு அமைய மாவட்டரீதியில் பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள் இயங்கும்.
– தொழிற்துறைகளின் தன்மைகளுக்கு அமைய வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பகுதி நேரமாக வேலையிழப்பினை சந்திக்கின்றவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும் என்பதோடு, தேவைகளுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
– பொதுப்போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படாது. ( பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள் போக்குவரத்து தொடர்பில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் இதர விடயங்கள் அறிவிக்கப்படவுள்ளதோடு, மக்கள் அதிகளவில் கூடுகின்ற தொடருந்து நிலையங்கள் மூடப்பட இருக்கின்றன)
– முடிந்தவரை வெளிநடமாட்டங்களை, பயணங்களை தவிக்குமாறு கோரப்படுவதோடு, முதியவர்கள் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத் வேண்டப்பட்டுள்ளது. முக்கியமாக முதியவர்கள் பிற மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவது தவிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக சுவாசப்பிரச்சினைகள், உடல்நலக்குறைபாடுள்ளவர்கள் வீடுகளில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
– மருத்துவமனைகளில் அவசரமான மருத்துவ தேவைகளை தவிர பிற, தேவைகள் பிறிதொரு நாளுக்கு பிற்போடப்படும்.
– வைரசுக்கு எதிரான தடுப்புமருந்து நாட்களோ, வாரங்களோ, மாதங்களோ எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதற்கான வளம் அசுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
– வைரசினால் ஏற்பட்டுள்ள பொருளதார சிக்கலை எதிர்கொள்ள பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் வங்கிகள் ஊடாக பொறிமுறையொன்று கையாளப்படும்.