கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயம்!

0
205

kjanதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ் -போதனா வைத்தியசாலையில் அவசர பிரிவில் சேர்க்கப்படுள்ளார்

திரு .கஜேந்திரன் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதிய கனரக வாகனத்தை ஓட்டிவந்த சாரதி; இலங்கையில் பேசப்படாத அயல்நாட்டு மொழியொன்றைப்பேசும் ஓருவராக இருந்தாரென்றும், விபத்து சம்மவித்த விதத்திலும் ஒரு தற்செயல் நிலைமை காணப்படவில்லை என்றும், நேரில் பார்த்தவர்கள் தகவல்தந்துள்ளனர் . அந்தச்சாரதி உடனடியாக யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலைய மொன்றில் சென்று தஞ்சமடைந்துள்ளார் என்றும், தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன .

கஜேந்திரன் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளபோதும் அவரது மோட்டார் சைக்கிள் முற்றாக நசியுண்டுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த திரு செ. கஜேந்திரன் அவர்கள்தொடர்ந்தும் யாழ்.போதனா வைத்தியசாலையில்அதி தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே சேர்க்கப்பட்டுள்ளார் ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here