பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 423 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை சுகாதார இயக்குனர் Jérôme Salomon தனது தின செய்தி அறிக்கையில் இதனை குறிப்பிட்டார். பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், நேற்று ஒரே நாளில் 138 புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்படுவது இதுவே முதன் முறை.
அதேவேளை, இந்த தொற்று காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 423 பேரில் 23 பேர் மிக மோசமாக உடல்நலக்குறைவுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.