10 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் fergersheim மாநகரசபை முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அரசியல் சந்திப்புக்களாக Sélestat, Colmar மாநகரசபைகளின் நகரபிதாவினை சந்தித்து
எமக்கிழைக்கப்ட்ட அநீதிக்கு 72 வருட காலமாக சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடரும் வன்முறைகள், இனவழிப்பு மற்றும் தமிழீழ தேசத்தின் தற்கால நிலையும் விரிவாக கலந்துரையாடப்பட்டு, பிரான்சுவெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு தமிழர்களின் நியாயமான வேண்டுகோளை எடுத்துச்செல்வதாக நம்பிக்கை வாக்குறுதிகள் தரப்பட்டன.
அதை தொடர்ந்து Mulhouse நோக்கி பயணிக்க தொடங்கிய மனித நேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் battenheim என்ற இடத்தில் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டது. தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப் பயணத்திற்கு தாயக,பன்நாட்டு ஊடகங்களும்(வலம்புரி)முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
“தமிழரின் தாயகம் தமிழீழ தாயகம்”