பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸ் தற்போது ‘இரண்டாம் கட்ட’ நிலையில் இருப்பதாகவும், ஆனால் மிக விரைவில் இது கடந்து மூன்றாம் கட்ட நிலைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள், இடங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல், கொரோனா வைரஸ் தாக்கத்தின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் புதிதாக 45 புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.